என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வங்கி கடன் மோசடி
நீங்கள் தேடியது "வங்கி கடன் மோசடி"
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய 3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இவர்கள் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் சொத்துக்களில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.335 கோடியே 6 லட்சம் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துகளை விற்று ரூ.7,975.27 கோடியை ஈட்டி உள்ளது.
இதையும் படிக்கலாம்....புதினுடன் நேரடியாக பேச தயார்: உக்ரைன் அதிபர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு, மோடி அரசு பதவிக்கு வந்தபோது வாராக்கடன் கவலைக்குரிய அம்சமாக இருந்தது. வாராக்கடனை மீட்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களை தந்தன.
ஜம்மு :
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீருக்கு சென்றார். முதலில், ஸ்ரீநகரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று ஜம்மு நகருக்கு சென்றார்.
அங்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

வங்கியில் கடன் பெற்று விட்டு அதை திருப்பிச் செலுத்தாதவர்களை துரத்தினோம். அவர்கள் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருந்தாலும் விடவில்லை. அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அவை சட்டரீதியாக விற்கப்பட்டோ, ஏலம் விடப்பட்டோ கிடைத்த பணத்தை வங்கியிடமே திருப்பி ஒப்படைத்தோம்.
இந்த பணி தொடர்ந்து நடைபெறும். வங்கியில் இருந்து பெறப்பட்ட பணத்தை வங்கியிடம் மீண்டும் சேர்க்க வைப்போம்.
நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த கூறியதாவது:-
வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களை சும்மா விட மாட்டோம். அவர்களின் சொத்துகளை கோர்ட்டு மூலம் பெற்று, வங்கிகளிடம் ஒப்படைப்போம்.
விஜய் மல்லையா, நிரவ் மோடி மட்டுமின்றி மேலும் பல மோசடியாளர்களும் உள்ளனர். கடனாக கொடுத்த பணம், அந்தந்த வங்கிகளுக்கு திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்து மத்திய அரசு திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும்.
வேறு மாநிலத்தினர் இங்கு தொழிற்சாலைகள் அமைக்க காஷ்மீர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...பெண்கள் கிரிக்கெட் தரவரிசை - மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ்
வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார். #VijayMallya
இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார்.
விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்?
இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். #VijayMallya
பிரிட்டனில் இருந்து தன்னை நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
லண்டன்:
இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. #vijaymallya
லண்டன்:
‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62). இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது. #vijaymallya
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. #VijayMallya #SpecialPMLACourt
புதுடெல்லி:
தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுச் சென்ற மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தார். பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் மறுத்துவிட்டார். #VijayMallya #SpecialPMLACourt
பிரிட்டன் நாட்டில் இருக்கும் விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt
லண்டன்:
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.
இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த பத்தாம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரை நாடு கடத்தும் உத்தரவு பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோர்ட்டின் உத்தரவுக்கு சாதகமாகவே முடிவுகள் எடுக்கப்படும் என்னும் நிலையில் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் ஆனந்த் டூபே இன்று தெரிவித்துள்ளார். அப்படி செய்யப்படும் மேல்முறையீட்டை நிராகரிக்கவோ, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவோ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு.
அப்படி மேல்முறையீடு வழக்கு நடத்தப்பட்டால் இந்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt #extraditionverdict #Mallyaextradition
என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். #CBI #VijayMallya #VijayMallyaextradition
லண்டன்:
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ஆர்த்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வசதி கொண்ட அறை ஒதுக்கீடு தொடர்பாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்தார்.
பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியானதும் லண்டனில் உள்ள கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லையா, 'இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக எனது வழக்கறிஞர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை அளிப்பார்கள்.
அதன் அடிப்படையில் அடுத்த செயல்பாடு தொடர்பான முடிவை எடுப்பேன். இந்த தீர்ப்பினால் நான் அதிர்ச்சி அடையவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
இன்று அளிக்கப்பட்டுள்ள நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த 28 நாட்களுக்குள் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
தலைமறைவு குற்றவாளியாக பிரிட்டனில் பதுங்கி இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு தெரிவித்துள்ளது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
புதுடெல்லி:
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.
பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்புக்கு விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை எடுத்த சி.பி.ஐ. வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர், ‘சி.பி.ஐ.க்கு என்று தனிப்பட்ட வலிமை உள்ளது. இந்த வழக்கில் நாங்கள் மிக கடுமையாக பணியாற்றினோம்.
அவர் நிச்சயமாக நாடு கடத்தப்படவார் என நாங்கள் நம்பினோம். மல்லையாவை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வந்து அவர் மீதான வழக்கை முடிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டனில் உள்ள வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லயாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
லண்டன்:
இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கில் நாளை இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் எனவும், நாளைய தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர். #CBIEDjointteam #VijayMallya #VijayMallyaextradition
நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக தன்னை அறிவித்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவின் பேரில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. #SCnotice #VijayMallya
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62) வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.
கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது. மக்களின் பணத்தில் இருந்து வங்கி கடனில் அசல் தொகையை முழுவதுமாக செலுத்த நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன் என சமீபத்தில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தன்னை நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்ககோரி மும்பை ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விஜய் மல்லையாவின் கோரிக்கையின்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. #SCnotice #EDnotice #Mallya #VijayMallya

இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விஜய் மல்லையாவின் கோரிக்கையின்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. #SCnotice #EDnotice #Mallya #VijayMallya
விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அவரது உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. #VijayMallya
லண்டன் :
தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று மால்டா தீவில் கைப்பற்றப்பட்டது. விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அந்த உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.
எனவே அந்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #VijayMallya

×

X